கைது
அமைச்சரை போனில்
மிரட்டிய 2 பேர் கைது
ராணிப்பேட்டை, ஜன.
அமைச்சர் காந்தியை போனில் மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி கடந்த 21 ம் தேதி சென்னை சென்று விட்டு காரில் ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காலை 10:57 மணிக்கு அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கியுள்ளார், அதை நீங்கள் தான் வாங்கித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவரிடம் போனில் பேசிய மற்றொரு நபர், அமைச்சரை தொந்தரவு செய்து மிரட்டும் வைகையில் பேசியுள்ளார். இது குறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன், 62, என்பவர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கோகுல், 25, கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, 31, ஆகியோர் அமைச்சர் காந்தியை மிரட்டும் தொனியில் பேசியது தெரியவந்தது.
போலீசார் அவர்களை இன்று கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment