பேட்டி
திருப்பத்தூர்மாவட்டம்
ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தின் வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுகிறது. திருப்பத்தூர் பகுதி மக்கள் விரும்பினால் ஜல்லிக்கட்டு விழாவை இங்கேயும் நடத்த நாங்கள் தயார். ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட எருது விடுவோர் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணை தலைவர் வாசு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு காளையும் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் விட வேண்டும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் மத்திய மாநில அரசு நெறிமுறைகளை இணைந்து கிராமங்களும் பின்பற்ற வேண்டும் ஒவ்வொரு கிராமங்களிலும் 200 டோக்கன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கூறுகையில்.ஜல்லிக்கட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விழாவாக எழுது விடும் திருவிழா நடைபெற்றாலும் ஜல்லிக்கட்டின் விதிப்படி தமிழகத்தின் வட மாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த எழுது விடும் திருவிழாவில் காளைகளை எவரும் துரத்தி பிடிப்பதும் இல்லை விரட்டுவதுமில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தை காளைகளை ஓடி கடந்து வெற்றி பெறுகின்றன. இந்த விழா குறித்த பொய்யான புகைப்படங்களையும் காட்சிகளையும் வைத்து நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கெல்லாம் இந்த ஆலோசனை கொடுத்து இருமலர்கள் நிறைவேற்றி தமிழக அரசுக்கு கொடுக்க உள்ளோம். மேலும் இந்தப் பகுதி மக்கள் விரும்பினால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் மாவட்ட செயலாளர் பி ஜி எம் சரவணன் மாவட்ட பொருளாளர் ஞானசேகரன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment