திருநாமம்

♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️
*******************************
🌲இன்று 249 ஆம்  திருநாமம்🌲
*************************************
🌹அப்ரமேயாத்மனே நமஹ :🌹
**********************************
(Aprameyaathmane namaha)

சாந்தோக்யோபநிஷத் 4-ம் அத்யாயம் 10-ம் கண்டத்தில் ஒருகதை வருகிறது.
ஜாபாலர் என்று குருவிடம் பல சீடர்கள் வேதம் பயின்று வந்தார்கள். 

அவர்களுள் உபகோசலன் என்பவன் இறை வனைப் பற்றி அறிவதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான். மற்ற சீடர்களுக் கு அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவி த்த ஜாபாலர், இறைவனை அறிய விழைந் த உபகோசலனுக்கு மட்டும் எந்தப் பாடமும் சொல்லித் தரவில்லை.

தான் தினமும் வணங்கும் மூன்று அக்னி ஹோத்திர அக்னிகளைப் பராமரிக்கும் பொறுப்பை மட்டும்.உபகோசலனிடம் ஒப்படைத்திருந்தார் ஜாபாலர்.

சில வருடங்களில் மற்ற சீடர்கள் அனைவ ரும் வேதப் படிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். ஆனால் உபகோ சலன் மட்டும் இன்னும் மூன்று அக்னிக ளையே பராமரித்து வந்தானே ஒழிய குரு அவனுக்கு எந்த பாடமும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், ஜாபாலர் வெளியூர் செல் ல நேரிட்டது. மூன்று அக்னிகளையும் உபகோசலனின் பொறுப்பில் விட்டு விட்டு ஜாபாலர் வெளியூர் சென்றார்.

தனது குரு தனக்கு இறைவனைப் பற்றி எதுவும் உபதேசம் செய்யாததை எண்ணி வருந்திய உபகோசலன், உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினான். 

அவனைக் கண்டு மனம் இரங்கிய அந்த மூன்று அக்னிகளும் அவனிடம் பேசின.
“உபகோசலா! அனைத்து விதமான காற்று க்கும் ஆதாரமாக உயிர்மூச்சாக இருப்பவர் இறைவன் ஆகாயம்போல் எங்கும் நிறை ந்தவர் அவர். அவர் எல்லையில்லாத ஆன ந்தமே வடிவெடுத்தவர்!” என்றெல்லாம்
அக்னிகள் அவனுக்கு உபதேசம் செய்தன.

அதன்பின் ஒவ்வொரு அக்னியும் தனித்த னியாக இறைவனைப் பற்றி உபகோசல னுக்கு எடுத்துச் சொல்லத் தொடங்கின.
முதல் அக்னி, “பூமி, நெருப்பு, உணவு, சூரி யன் ஆகியவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு அவற்றை உள்ளிருந்து இயக்கு பவர் இறைவன்!” என்று சொன்னது.

இரண்டாவது அக்னி “தண்ணீர், திசைகள், நட்சத்திரங்கள் சந்திரன் உள்ளிட்டவற்றை த் தனக்கு உடலாக  கொண்டு, அவற்றை உள்ளிருந்து இயக்குபவர் இறைவன்!” என்று சொன்னது.

மூன்றாவது அக்னி, “மூச்சுக்காற்று, ஆகா யம், மேலுலகம், மின்னல் ஆகியவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு, அவற்றை உள்ளிருந்து இயக்குபவர் இறைவன்!” என்று சொன்னது.

“அப்படியானால் இவற்றை எல்லாம் அறிந் தால் இறைவனை அறிந்து கொண்டு விட லாமா?” என்று கேட்டான் உபகோசலன்.

“இல்லை! இறைவன் நமது புலன்களுக்கு ம் புத்திக்கும் அப்பாற்பட்டவர். அவரை முழுமையாகச் சொல்லவும் முடியாது, முழு மையாக அறியவும் முடியாது. தெரிந்த பொருளைக் காட்டித் தெரியாத பொருளை த் தெரிவிக்க முற்படுவது போல், சூரியன், தண்ணீர், காற்று போன்ற பொருட்களைச் சொல்லி புலன்களுக்கு அப்பாற்பட்ட இறை வனை உனக்கு உணர்த்த முற்பட்டோம்.

உனது குரு இனி மேற்கொண்டு இறைவ னைப் பற்றி உனக்குக் கூறுவார்!” என்று அக்னிகள் கூறின.

வெளியூரிலிருந்து திரும்ப வந்த ஜாபாலர் உபகோசலின் முகத்தில் ஒரு தேஜஸ் தெரி வதைக் கண்டார். “உனக்கு யாராவது இறைவனைப் பற்றி உபதேசித்தார்களா?” என்று அவனிடம் கேட்டார். நடந்தவற்றைச் சொன்னான் உபகோசலன்.

ஜாபாலர், “உபகோசலா! நம் அனைவரின் கண்ணுக்குள்ளும் இறைவன் எழுந்தருளி யிருப்பதாகத் தியானிக்க வேண்டும்!
தன்னைச் சரணடைந்தோர்க்கு அனைத்து நன்மைகளையும் தருபவர் அவர். ஒளிப டைத்த திருமேனியோடு அவர் விளங்குகி றார்! நானோ, இந்த அக்னிகளோ, இன்னு ம் எத்தனை பேர் பேசினாலும், இறைவ னைப் பற்றி முழுமையாகப் பேசி முடிக்க இயலாது. நீயும் எவ்வளவு தான் கேட்டாலு ம் இறைவனைப் பற்றி முழுமையாக அறிய முடியாது!” என்றார் ஜாபாலர்.

“ஞானிகள் இறைவனை முழுமையாக அறி ந்திருப்பதாகச் சொல்கிறார்களே! அவர்கள் எப்படி அறிந்தார்கள்?” என்று கேட்டான் உபகோசலன்.

அதற்கு ஜாபாலர், “இறைவனை முழுமை யாக அறிய முடியாது என்பதை யார் உண ர்கிறாரோ, அவர்தான்ஞானி. இறைவனை அறிந்து விட்டதாக யாரேனும் சொன்னால் அவர் உண்மையில் அறியவில்லை என்றே பொருள்!” என்றார்.

இதையேநம்மாழ்வாரும்,
“உணர்ந்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமைஉணர்ந்துணர்ந்து உணரி லும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்”   

என்று பாடியுள்ளார்.

இவ்வாறு நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருந்தாலும், நம்மால் முழுமையா க அறியமுடியாதபடி எல்லையற்ற பெரு மையுடன் திருமால் திகழ்வதால், அவர் ‘அப்ரமேயாத்மா’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 249-வது திருநாமம்.“அப்ரமேயாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்க ளுக்குப் புரியாதவை யாவும் புரியும் படி திருமால் அருள் புரிவார்...

(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)

🌹🌹ஓம் நமோ நாராயணாய..
🌹🌹ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்