திருநாமம்
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️
*******************************
🌲இன்று 254 ஆம் திருநாமம் 🌲
*************************************
🌹ஸித்த ஸங்கல்பாய நமஹ :🌹
**************************************
(Siddhasankalpaaya namaha)
ஆதி சங்கரர் சிருங்கேரியில் முகாமிட்டிரு ந்த போது, கிரி என்ற இளைஞன் அவருக் குச் சீடராக வந்து இணைந்தான். குரு பக்தியில் தலை சிறந்தவனாகத் திகழ்ந்த கிரியின் மேல் சங்கரருக்குப் பிரீதி உண்டானது.
அவனைத் தன்னோடு காசிக்கு அழைத்து சென்றார் சங்கரர்.காசியில் தினமும் சங்க ரர் தமது சீடர்களுக்கு வேதாந்த பாடங்கள் நடத்தி வந்தார். அந்த வகுப்புகளில் எல் லாம் தவறாமல் பங்கு கொண்ட போதும்,
கிரிக்கு வேதாந்த ஞானம் துளி கூட வரவில்லை.
இந்நிலையில் ஒருநாள் சங்கரரின் பூஜை க்காகப் பூப்பறிக்கச் சென்றிருந்தான் கிரி.
மற்ற சீடர்கள் எல்லோரும் வேதாந்த பாடத் துக்குத் தயாராக வந்து அமர்ந்து கொண் டார்கள். கிரி மட்டும் வரவில்லை.
அப்போது ஹஸ்தாமலகர் என்னும் சீடர், “சுவாமி! பாடத்தை ஆரம்பிக்கலாமா?” என்று சங்கரரிடம் பணிவோடு கேட்டார்.
ஆனால் சங்கரரோ, “கிரி இன்னும் வரவி ல்லை. அவன் வந்தபின் பாடத்தைத் தொ டங்கலாம்!” என்று கூறினார்.
அப்போது பத்மபாதர் என்னும் சீடர், “எதிரி ல் உள்ள ஒரு சுவரைச் சுட்டிக் காட்டிவிட்டு, இதற்கும் கிரிக்கும் ஒன்றும் பெரிய வித்தி யாசம் இல்லை! அவன் பாடத்துக்கு வந்தா லும் ஒன்று தான், வராவிட்டாலும் ஒன்று தான்!” என்று சொல்ல, அனைத்துச் சீடர்க ளும் கிரியைக் கேலி செய்து சிரித்தார்கள்
அச்சமயம் கிரியின் குரல் கேட்டது.
“விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்”
(சாஸ்திரங்களாகிற சமுத்திரங்கள் அனை த்தையும் கற்றுத் தேர்ந்தவரும், உபநிஷத் துக்கள் கூறும் தத்துவங்களின் இருப்பிட மாகத் திகழ்பவருமான ஆதி சங்கரரின் பாத கமலங்களை என் இதயத்தில் வைத் துப் போற்றுகிறேன். மஹா ஞானியான என் குருசங்கரர் தான் எனக்கு அடைக்கல ம் தந்தருள வேண்டும்) என்று தொடங்கி,
சங்கரரின் மேன்மைகளைக் குறித்து எட்டு ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டு, கைக ளைத் தட்டித் தாளம் போட்டுக் கொண்டு,
துள்ளித் துள்ளி ஓடி வரும் கிரியை சீடர்க ள் கண்டார்கள்.
வடமொழியில் உள்ள பாவகைகளுள் தோ டகம் என்னும் பா வகையில் இந்த எட்டு ஸ்லோகங்களையும் கிரி இயற்றியிருந் தான். தோடகம் என்னும் பாவில் கவிதை எழுதுவது பெரும் கவிஞர்களுக்கே கடின மான செயலாயிருக்க, அறிவிலியான கிரி யால் எப்படி எட்டு ஸ்லோகங்கள் எழுதிப் பாட முடிந்தது என்று சீடர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அப்போது அவர்களை பார்த்து, “சீடர்களே! கிரிக்கு ஞானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அளவு கடந்த குருபக்தியை உடை யவனாக அவன் இருக்கிறான். அத்தகைய குரு பக்தி உள்ளவர்களைத் தான் இறைவ னும் விரும்புவான்..."
"மிகச்சிறந்த குருபக்தனான கிரியின் அறி வை நீங்கள் கேலி செய்தீர்களல்லவா? அது இறைவனுக்கே பொறுக்கவில்லை!
அதனால் ஒரே நொடியில் அவனுக்கு மிகச்சிறந்த பாண்டித்தியமும் ஞானமும் ஏற்படும்படி இறைவன் அருள்புரிந்து விட்டார்!” என்று கூறினார் சங்கரர்.
சங்கரர் குறித்து கிரி இயற்றிய அந்த எட்டு ஸ்லோகங்கள் ‘தோடகாஷ்டகம்’ என்று பெயர் பெற்றன.இந்த தோடகாஷ்டகத்தை எழுதியபடியால், ‘தோடகாச்சாரியார்’ என் றே கிரிக்குப் பெயர் ஏற்பட்டது. தாம் நிறுவிய மடங்களுள் ஒன்றான ஜோதிர் மட பீடத்துக்குப் பீடாதிபதியாகத் தோடகா ச்சாரியாரை நியமித்தார் சங்கரர்.
கல்வி அறிவில் மந்தமாக இருந்த கிரி, தோடகாச்சாரியாராக மாறியதற்கு எது காரணம்? அவரது குருபக்தியே! அந்த குருபக்திக்கு உகந்த இறைவன், கிரிக்கு ஞானம் உண்டாகட்டும் என்று மனதில் நினைத்தார்.
அடுத்த நொடியே கிரிக்கு ஞானம் உண் டாகி விட்டது.நமக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். நாம் ஒரு செய லைச் செய்ய வேண்டும் என்றால் அதை மனத்தால் நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான பிரயத்தனத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இறைவ னுக்கோ, பிரயத்தனப்பட தேவையில்லை.
அவர் மனத்தால் நினைத்தாலேயே அந்தச் செயல் நிறைவேறி விடும்.‘ஸங்கல்பம்’ என்பது நமது எண்ணத்தைக் குறிக்கும்.
‘ஸித்த:’ என்றால் ஈடேறுதல் என்று பொரு ள். திருமாலின் எண்ணங்கள் யாவும் நினைத்தமாத்திரத்தில் ஈடேறிவிடுவதால்,
அவர் ‘ஸித்தஸங்கல்ப:’ (அனைத்து எண் ணங்களும் ஈடேறப்பெற்றவர்) என்றழைக் கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 254 வது திருநாமம். “எண்ணிய முடிதல் வேண் டும் நல்லவே எண்ணல் வேண்டும்!” என்று பாரதியார் பாடியதற்கேற்ப “ஸித்தஸங்க ல்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல எண்ணங்கள்
விரைவில் நிறைவேறத் திருமால் அருள் புரிவார்.
(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
🌹🌹ஓம் நமோ நாராயணாய..
🌹🌹ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...
Comments
Post a Comment