பயணம்

பிளாஸ்டிக் மறுசுழற்சியை
வலியுறுத்தி சைக்கிள்
பயணம்




வேலுார், 
பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி 50 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் வேலுார் வந்தார்.
ஆந்திரா மாநிலம், நெல்லுாரை சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா, 22. பி.எஸ்.சி., படித்துள்ள இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி ஆந்திரா மாநிலம், நெல்லுாரில் இருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கி.மீ., துாரம்  சைக்கிள் சென்று பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது இவர் ஆந்திரா, கர்நாடாகா மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கி.மீ.,  துாரம் கடந்து இன்று தமிழ்நாட்டில் வேலுார் வந்தார். மக்கள் சார்பில் அவருக்கு வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது  குறித்து குர்ரம் பெஞ்சாலா சைதன்யா கூறியதாவது: 2022 ம் ஆண்டு மே முதல் ஜூன் வரை மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆந்திரா  மாநிலம் நெல்லுாரிலிருந்து, தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் சென்றேன். அதே ஆண்டு உணவை வீணாக்கக்கூடாது என்பதை வலிறுயுத்தி நெல்லுாரிலிருந்து  குஜராத் வழியாக பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். தற்போது பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறேன்.
635 நாட்கள் நடக்கும் சைக்கிள் பயணத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என 30 மாநிலங்கள், 700 மாவட்டங்கள் வழியாக 50 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிளில் செல்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு சென்றார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்