தெரியுமா
ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல்
அலைவது தான் வாழ்க்கை..!
வாழ்க்கையில் நிம்மதி தேவை
என்றால்.. நிச்சயம்
ஞாபகமறதி அவசியம்..!
நிம்மதியை தேடுவதை
நிறுத்திய பிறகு தான் தெரிந்தது..
எதையும் தேடி அலையாமல்
சும்மா இருப்பதே நிம்மதி என்று..!
அடுத்தவர்கள் என்ன
நினைப்பார்கள் என்று வாழ
ஆரம்பித்தால்.. நம் நிம்மதி
அப்போதே நம்மை விட்டு
சென்று விடும்..!
சந்தோசம்.. நம்பிக்கை..
நிம்மதி இவற்றைத்
தொலைப்பது எளிது..
மீண்டும் அவற்றைப் போலே
மீளக்கிடைப்பது மிகக் கடினம்..!
இவர்கள் ஏன் இப்படி
என்பதை விட.. இவர்கள்
இப்படி தான் என்று நினைத்து
விலகி விடுவது நிம்மதி..!
எனக்கென யாருமில்லை
என்று நிம்மதி இழக்கும் போது
உனக்காக எப்போதும் உன்னோடு
நான் இருப்பேன் என்று சொல்லும்
ஒரு உறவு அமைதல் வரம்..!
மகிழ்ச்சி கூட சிறு சிறு
நிகழ்வுகளை அழகாய்
உருவாக்கி விடுகிறது.. ஆனால்
“நிம்மதி” கிடைப்பதற்கு தான்
வாழ்க்கையை அர்ப்பணிக்க
வேண்டியிருக்கிறது..!
நன்றி மறந்தவர்களை எண்ணி
நீ நிம்மதி இழக்காதே.. உன்
உதவியை மனிதர்கள் மறந்து
போகலாம் தெய்வம் மறப்பதில்லை..!
பணம் நிம்மதி தராது என்று
எந்த ஏழையும் சொன்னதில்லை..
நிம்மதி தராத அந்த பணத்தை
இழக்க எந்த பணக்காரனும்
தயாராக இல்லை..!
கண்ணில் தூக்கம் இல்லை..
வாழ்க்கையில் சந்தோஷம்
இல்லை.. மனதில் நிம்மதி
இல்லை.. காரணம் நீ என்
பக்கத்தில் இல்லை..!
தேவை என்றால் வரும்
உறவுகளையும்.. தேவையில்லாமல்
வரும் உணர்வுகளையும்..
ஒதுக்கி வைக்க கற்றுக்
கொள்ளுங்கள் நிம்மதி
நம்மை தேடி வரும்..!
மன நிம்மதிக்காகத்தான்
உறவுகளை ஆண்டவன்
படைத்தான்.. ஆனால்
மனதில் நிம்மதி இல்லாமல்
போவதற்கு காரணமே
அந்த உறவுகள் தான்..!
பிறர் மீதான வீண்
எதிர்பார்ப்புகளை குறைத்துக்
கொண்டாலே போதும்
எப்போதும் நிம்மதியாக
இருக்கலாம்..!
தேடினது கிடைக்காதா..னு
ஆசை..
ஆசை நிறைவேறாத..னு
எதிர்பார்ப்பு..
எதிர்பார்ப்பு தந்த
ஏமாற்றம்..
ஏமாற்றம் தந்த வலி..
வலியை சுமந்தபடி
வாழுற மனசு.. இதுல
எங்க இருந்து நிம்மதி
வர போகுது..!
சிலவற்றை ஆராயாதே..
மன நிம்மதி நீங்கி விடும்..!
மனதில் உள்ள கஷ்டத்தை
வெளிய சொல்லி
அழுத்தவர்களை விட..
வெளிய சொல்லாமல்
அழுத்தவர்கள் தான் அதிகம்..!
நிம்மதியாக இருக்கும்
வயதில் மனைவியை
தேடுவதும்.. மனைவி வந்த பின்
நிம்மதியை தேடுவதுமே..
ஆண்களின் வாழ்க்கை தேடல்..!
நிம்மதி என்ற நிழல்
உன்னை தொடரும்.. நேர்மை
என்ற வெளிச்சம் உள்ள வரை..!*இறப்புக்குப் பின்பு*
*வாழ்வு இருக்கிறதா...?*
*என்பது கேள்வியல்ல...!*
*இறப்பதற்கு முன்*
*உங்கள் வாழ்க்கையை*
*நீங்கள் வாழ்ந்தீர்களா*
*என்பது தான் கேள்வி...!*
*இனிய வணக்கம் 🙏🙏🙏*
வாழ்க்கையை வெறுப்பதால்
ஒரு போதும் நிம்மதி உண்டாகாது..!
நிம்மதி தேடிச் செல்லும் நாம்..
எவ்வளவு செலவு செய்தாலும்
கிடைக்காத ஒரு நிம்மதியான
இடம் அம்மாவின்
மடி மட்டும் தான்..!
பசிக்கு உணவு.. மானத்திற்கு
உடை.. மனதிற்கு நிம்மதி..
இதே நிலை நிலையானால்
வாழ்வு சொர்க்கம்..!!!
Comments
Post a Comment