விஷ்ணு போற்றி
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️
*********************************
🌲இன்று 250 ஆம் திருநாமம்🌲
*************************************
🌹விசிஷ்டாய நமஹ :🌹
*****************************
(Visishtaaya namaha)
வனவாசம் சென்ற ராமன், சுதீட்சணர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் சிலகாலம் சீதையோடும் லட்சுமணனோடும் தங்கியிருந்தான்.
அப்போது ராமனைச் சந்திப்பதற்காக சில முனிவர்கள் அங்கே வந்தார்கள். அருகிலு ள்ள தண்டகாரண்யம் என்னும் வனப்பகு தியில் அரக்கர்களின் நடமாட்டம் அதிகரி த்து வந்தது. முனிவர்களின் வேள்விகளை த் தடுப்பதும், முனிவர்களைக் கொன்று குவிப்பதுமே அவ்வரக்கர்களின் வழக்க மாக இருந்தது.
எனவே அந்த அரக்கர் கூட்டத்தை எல்லாம்
அழித்தொழித்து முனிவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டும் என்று ராமனிடம் பிரா ர்த்தனை செய்வதற்காக ராமனிடம் அம்மு னிவர்கள் வந்தார்கள்.
அவர்களை மதிப்போடும் மரியாதையோ டும் வரவேற்ற ராமனிடம், அம்முனிவர் கூட்டத்தின் தலைவர்,“ராமா உன் எழிலில் மயங்கிய நாங்கள், உன்னை ஆலிங்கனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பி வந்துள்ளோம்!” என்று கூறினார்.
மற்ற முனிவர்களும், “ஆம் ராமா! உன்னை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று விரும்பி வந்துள்ளோம்!” என்றார்கள்.
‘ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்’ என்ற ரீதி யில் ஏகபத்தினி விரதனான ராமன், “முனி வர்களே சீதாதேவி ஒருத்தி தான் என்னை ஆலிங்கனம் செய்து கொள்ள இயலும். அவளைத் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமையை இந்த அவதாரத்தில் நான் வழங்கவில்லை!” என்று கூறினான்.
அதைக் கேட்டு மிகவும் வருந்திய முனிவர் கள், “ராமா! நாங்கள் உன்னிடம் பணமோ பொருளோ அரசோ கேட்டு வரவில்லையே
உன்மேல் உள்ள பக்தியினால் உன்னை ஆரத் தழுவுகின்ற பாக்கியத்தைத் தானே பிரார்த்தித்தோம்? அதை கூட எங்களுக்கு அருள மாட்டாயோ?” என்று கேட்டார்கள்.
அதற்கு ராமன், “இந்த அவதாரத்தில் தான்
வேறு யாரையும் தழுவிக் கொள்ள மாட்டே ன் என்று சொன்னேன். எனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில்,
நீங்கள் அனைவரும் ஆயர்பாடியிலுள்ள ஆய்ச்சிகளாக வந்து பிறப்பீர்கள். அப்போது நானே உங்களைத் தேடி வந்து
உங்கள் ஒவ்வொருவரையும் நெஞ்சார அணைத்துக் கொள்வேன்!” என்றான்.
மேலும், “வேறு ஏதாவது பிரார்த்தனைகள் உள்ளதா”? என்று அந்த முனிவர்களிடம் கேட்டான் ராமன்.
“வேறு எந்தப் பிரார்த்தனையும் இல்லை! உன்னைத் தழுவிக் கொள்ளும் பேற்றை அடுத்த அவதாரத்தில் அருளியமைக்கு நன்றி!” என்று சொல்லி விட்டு முனிவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
செல்லும் வழியில், முனிவர் கூட்டத்தின் தலைவரிடம் ஒரு முனிவர், “சுவாமி! அரக் கர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வதம் செய்யுமாறு ராமனிடம் பிரார்த்திக்க ச் சென்றோம்! ஆனால் அதைப் பிரார்த்தி க்காமல், ராமனை ஆலிங்கனம் செய்யும் பேற்றைப் பிரார்த்தித்துவிட்டுத் திரும்பி விட்டோமே!” என்று கேட்டார்.
அதற்கு அம்முனிவர் தலைவர், “நான் ராம னைக் காணசெல்லும் முன், அவனது வீர தீர பராக்கிரமத்தை கருத்தில் கொண்டு
அரக்கரிடம் அவனைப் போர் புரியச் சொல் லலாம் என்று கருதினேன்.
ஆனால் ராமனின் அந்த மென்மையான உடலையும், கண்கொள்ளா வடிவழகையு ம் கண்ட மாத்திரத்தில், அவனை அள்ளி அணைக்கத் தான் தோன்றியதே ஒழிய, இவ்வளவு மென்மையான ராமனை அரக் கர்களை எதிர்த்துப் போர் புரியச் சொல்ல எனக்கு மனம்வரவில்லை. அதனால் தான் ஆலிங்கனம் செய்து கொள்ளும் பாக்கிய த்தை மட்டும் பிரார்த்திவிட்டுத் திரும்பி விட்டேன். மற்ற முனிவர்களும் என்னைப் போலவே அவன் எழிலில் மயங்கி விட்ட தால், போர் புரிவதைப் பற்றி யாருமே பேச வில்லை!” என்றார்.
“இதுவரை நீங்கள் ராமனைக் கண்டதே இல்லையா? இப்போது மட்டும் ஏன் இந்த திடீர் ஆசை?” என்று கேட்டார் மற்றொரு முனிவர்.
அதற்கு முனிவர்தலைவர், “இதுவரை நான் ராமனை நாட்டில் தரிசித்திருக்கிறே ன். அப்போதெல்லாம் அவன் அணிந்திரு க்கும் ஆடை ஆபரணங்கள் அவனது உண் மையான திருமேனி அழகை மறைத்து விடும். ஆனால் இப்போது ஆடை ஆபரண ங்களைக் களைந்துவிட்டு, வெறும் மரவுரி யோடு வனவாசம் வந்தபடியால், ராமனின் முழுமையான வடிவழகை நான்காண நேர் ந்தது..அதனால் தான் இதுவரை உண்டா காத ஆசை இப்போது உண்டானது!” என்று கூறினார்.
பெருமாளை ‘ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்’ என்று சொல்வார்கள் நாம் அணிவிக்கும் ஆடைகளாலோ, ஆபர ணங்களாலோ, பெருமாளுக்குப் பெருமை யோ, அழகோ வருவதில்லை. மாறாக, அவர் திருமேனியை அலங்கரிப்பதால்,
ஆடைகளும் ஆபரணங்களும் பெருமை பெறுகின்றன.
அவை இல்லாவிடினும் அவரது திருமேனி எழிலும் பொலிவும், பெருமையும் குன்றா மல் இருக்கும்.இவ்வாறு மிக உயர்ந்தவ ராகவும், தனது உயர்வுக்கு வேறு எந்தப் பொருளின் உதவியை எதிர்பாராதவராக வும் திருமால் திகழ்வதால் ‘விசிஷ்ட:’ என்ற ழைக்கப்படுகிறார்.
‘விசிஷ்ட:’ என்றால் மிக உயர்ந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 250-வது திருநாமம்.“விசிஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்க ளுக்கு வாழ்வில் அனைத்து விதமான உயர்வுகளும் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
🌹🌹ஓம் நமோ நாராயணாய..
🌹🌹ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...
Comments
Post a Comment