பேட்டி
ஏ.டி.எம்., கொள்ளைகளை
தடுக்க தொடர் இபீட்
டி.ஐ.ஜி., பேட்டி
வேலுார்
ஏ.டி.எம்., கொள்ளைகளை தடுக்க தொடர் இபீட் ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி கூறினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்தை வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குடியாத்தம் பகுதியில் ஏற்கனவே நடந்த அசோக் ஜிவல்லரி என்ற நகை கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமயில் நடந்த ஏ.டி.எம் கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்தப்பட்ட இபீட் எனப்படும் பைக்குகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரவு நேரங்களில் நடக்கும் பெரிய கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது குடியாத்தம் டி.எஸ்.பி, ராமமூர்த்தி உடனிருந்தார்.
Comments
Post a Comment