திருநாமம்

♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️
*******************************
🌲இன்று 253 ஆம்  திருநாமம் 🌲
*************************************
🌹ஸித்தார்த்தாய நமஹ :🌹
***********************************
(Siddhaarthaaya namaha)

சேதுக்கரையில் முகாமிட்டிருந்த ராமபிரா னிடம் சரணாகதி செய்ய விபீஷணன் வந்த போது, சுக்ரீவனும் மற்ற வானரர்க ளும் விபீஷணனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ராமனிடம் சொன்னார்கள். 

“உடன்பிறந்த சகோதரனான ராவணனுக் கே துரோகம் செய்யத் துணிந்த விபீஷண ன் நாளை நமக்கும் துரோகம் இழைத்திடு வான்!” என்பது சுக்ரீவனின் வாதம்.

ஆனால் அனுமனோ, “நான் இலங்கைக்கு சென்றபோது கவனித்தேன். இந்த விபீஷ ணன் தர்மாத்மா. இவனை ஏற்றுக் கொள் ளுங்கள். என்னுயிரைக் காத்தவனே இவன் தான்!” என்று ராமனிடம் கூறினார்.

“இவன் தீயவன், ஏற்கக் கூடாது!” என்று சுக்ரீவனும், “இவன் நல்லவன், ஏற்கலாம்!” என்று அனுமனும் சொல்ல,

ராமனோ, “இவன் நல்லவனோ தீயவனோ, சரணம் என்று என்னைத் தேடி வந்து விட் டான். அவனை ஏற்றுக் கொண்டே தீருவேன்!” என்றான்.

“ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன்!”

என்று ராமன் விபீஷணனுக்கு அபயம் அளித்த விதத்தை வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

“விபீஷணன் மட்டுமில்லை, அவனது அண் ணன் ராவணனே வந்தாலும், அவனையும் எனது நண்பனாக ஏற்க நான் தயார்!” என்று சொல்லியபடித் தனது கூடா ரத்தில் இருந்து வெளியே வந்த ராமன், தன்னைத் தேடி வந்த விபீஷணனையும்
அவனுடன் வந்த நால்வரையும் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டான். 

தன்னை நாடி வந்தவனுக்கு ஏற்ற வெகும தியை அளிக்க விரும்பிய ராமன், இலங் கையின் அரசனாக விபீஷணனுக்குக் கட ற்கரையிலேயே பட்டாபிஷேகம் செய்வித் தான்.

பின்னர் சேது பாலம் அமைத்து, ராமனும் வானர வீரர்களும் ராவணனின் சேனை யை எதிர்த்து போர் புரியத் தொடங்கினார் கள். யுத்தம் உச்சத்தில் நடந்து கொண்டிரு ந்த வேளையில், ராம பாணங்களால் தாக் கப்பட்டுத் தனது வில், அம்பு, கவசம், தேர் அனைத்தையும் இழந்து நிராயுதபாணி யாக நின்றிருந்தான் ராவணன். 

அவனைப் பார்த்து ராமன்,
“ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்ப் போர்க்கு நாளை வா!”

என்று சொன்னதாகக் கம்பர் பாடுகிறார்.

“இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்ற சொற்றொடரின் மூலம், “இவ்வாறு என்னிடம் வீழ்ந்ததற்கு அப்புறமும் உனக் குப் போரில் நாட்டமிருந்தால் நாளை வா. மனம் திருந்தி சரணாகதி செய்ய நினைத் தால் அதைஇப்போதே செய்து விடு”என்ற கருத்தை ராவணனிடம் தெரிவித்தான் ராமன்.

அன்று மாலை சுக்ரீவன் ராமனிடம்,
“ராமா ராவணன் திருந்தி சரணாகதி செய்தால் அவனை நிச்சயமாக ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்டான்.

“அதில் சந்தேகமே வேண்டாம்!” என்றான் ராமன். 

“அப்படியானால், ஏற்கனவே கடற்கரையி ல் இலங்கையின் மன்னனாக விபீஷண னுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டாயே! இந்நிலையில் ராவணன் மனம் திருந்தி வந்தால், இலங்கையின் அரசை ராவணனிடமே ஒப்படைப்பாயா?” என்று கேட்டான் சுக்ரீவன்.

அதற்கு ராமன், “நான் கொடுத்த வாக்கை என்றும் மீறமாட்டேன். இலங்கைக்கு அரச னாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம்
செய்து வைத்து விட்டேன். இனி இலங் கைக்கு என்றுமே அவன் தான் மன்னன்!” என்றான்.

“அப்படியானால் ராவணனுக்கு என்ன தருவாய்?” என்று கேட்டான் சுக்ரீவன். 

“ராவணன் மனம் திருந்தி,.பிறன்மனை நோக்கும் பழக்கத்தை விட்டு, சீதையை ஒப்படைத்தால், அயோத்தி ராஜ்ஜியத்தை அவனுக்கு வழங்கி விட்டு, சீதையுடன் நான் வனம் செல்வேன்!” என்றான் ராமன்.

“உனக்கு ராஜ்ஜியம் வேண்டாமா?” என்று ராமனிடம் கேட்டான் சுக்ரீவன்.

அப்போது குறுக்கிட்ட லட்சுமணன், “சுக்ரீவா! அவாப்த-ஸமஸ்த-காமனாகிய என் அண்ணன், இயற்கையிலேயே தனது அனைத்து விருப்பங்களும் ஈடேறப் பெற்ற வராகவும், எப்போதும் மனம் நிறைந்தவரா கவும் திகழ்கிறார்..."

"அயோத்தி ராஜ்ஜியத்தாலோ, இலங்கை ராஜ்ஜியத்தாலோ புதிதாக எந்த ஒரு மகி ழ்ச்சியும் அவருக்கு வரப்போவதில்லை!
அனைத்தையும் அடியார்களுக்குத் தந்து விட்டு வனம் சென்றாலும் அவரது மகிழ்ச் சியில் குறைவில்லை!” என்று கூறினான்.

‘அர்த்த:’ என்பது விருப்பங்களைக் குறிக் கும். ‘ஸித்த:’ என்றால் ஈடேறுதல் என்று பொருள்.

தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறப் பெற்ற இயல்வினராகத் திருமால் எப்போ தும் திகழ்வதால், அவர்.‘ஸித்தார்த்த:’
(விருப்பங்கள் யாவும் ஈடேறப்பெற்றவர்) என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 253-வது திருநாமம். “ஸித்தார்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் தர்மத்துக்கு உட்பட்ட அனைத்து விருப்பங் களும் கைகூடும்படித் திருமால் அருள்புரி வார்.

(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)

🌹🌹ஓம் நமோ நாராயணாய..
🌹🌹ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்