மாரத்தான் ஓட்டம்
மாராத்தான் ஓட்டம்
வேலுார்
வி.ஐ.டி., பல்கலை சார்பில் நடந்த மாராத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் சார்பில், சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் ரிவேரா என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதையொட்டி மன நலம், மன உறுதி என்ற நோக்கத்திற்காக மாராத்தான் ஓட்டம் நேற்று காலை நடந்தது.
காட்பாடியில் தொடங்கிய மாராத்தான் ஓட்டத்தை வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். சித்துார் பஸ் ஸ்டாண்டு, ஆக்ஸீலியம் கல்லுாரி, திருவலம் வழியாக சென்று மீண்டும் வி.ஐ.டி., பல்கலைக்கு வந்தடைந்தது. 9 கி.மீ., துாரம் நடந்த மாராத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment