விழா
கல்வியை போல
விளையாட்டிற்கும் மாணவர்கள்
முக்கியத்துவம் அளிக்க
வேண்டும்
இந்திய கிரிக்கெட்
அணியின் முன்னாள் கேப்டன்
அஜிங்கியே ரஹானே பேச்சு
கல்வியை போல விளையாட்டிற்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேலுார் வி.ஐ.டி., யில் நடந்த ரிவேரா தொடக்க விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியே ரஹானே பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் நடக்கும் (23, 24, 25) சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் ரிவேரா தொடக்க விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியே ரஹானோ விழாவை தொடங்கி வைத்து மாராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னை சூப்பர் கிங்க் அணிக்காக இந்தாண்டு விளையாடுகிறேன். மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கலைக்கும், விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவு பங்கேற்க வேண்டும். இந்தியாவில் அதிகம் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் தைரியமானவர்கள்.
அவர்களுக்கு புதிய கருத்துக்களை சொல்ல வேண்டியதில்லை. இது போன்ற விழாக்களில் பங்கேற்பதன் மூலம் தங்கள் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் நல்ல எதிர்காலத்தை முடிவு செய்து அதற்கான திட்டத்தை வகுத்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியது: ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கள் ஆகியோரை பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். தோனியை பார்த்து வளர்ந்தேன். அவர்கள் அனைவரும் எனக்கு ரோல் மாடல்கள்.
ஆஸ்திரேலியா நாட்டிலகாபா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதை என்னால் மறக்க முடியாது. அந்த போட்டியில் கடினமாக விளையாடி வெற்றி பெற்றோம். கிரிக்கெட் என் உயிர் மூச்சு. புத்தகம் படிப்பது என் பொழுது போக்கு. தற்காப்புக்கலையில் நான் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கிறேன்.
கல்லுாரி வாழ்க்கையை என்னால் மறக்க முடியாது. ஒரு நாள் மட்டும் வகுப்புக்கு சென்றேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதால், கல்லுாரி வாழ்க்கையை தவற விட்டேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு என் பெற்றோர் ஆதரவுடன் கிரிக்கெட்டில் உயர்ந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி., துணைத்தலைவர்கள் சங்கர், செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி, துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் பங்கேற்றனர்.
ரிவேரா விழாவில் இந்தியாவில் 700 பல்கலைக்கழங்கள், கல்லுாரி மற்றும் 44 வெளி நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்களிலிருந்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment