துணிவு
🍒🍒🍒மனோதிடம் தான் எதையும் 🍒🍒🍒
*♻️தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம்.மனோதிடம் என்பது துணிச்சலின் அடையாளம்.*
*♻️துணிவு உள்ளவனையே அறிவுள்ளவன் என்று நமது முன்னோர்கள் மதித்தார்கள்.*
*♻️உதவி கிடைத்தாலென்ன ? கிடைக்காவிட்டாலென்ன? எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்ள முடியும் என்று உறுதிபடச் சொல்லக் கூடிய மனோதிடம் வேண்டும்.*
*♻️வெற்றி, முன்னேற்றம், மகிழ்ச்சி அனைத்தும் நம் கைகளில் தான் இருக்கின்றன.*
*♻️நாம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இருந்தால் நமக்கு வர வேண்டியவை தாமாக வந்து கொண்டு இருக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.*
*♻️சிறு வயதில் நெப்போலியன் ராணுவ விடுதியில் படித்துக் கொண்டு இருந்தார்.*
*♻️அந்த சமயத்தில் ஒரு நாள் நெப்போலியன் அறைக்குப் பக்கத்து அறையில் உள்ள மற்றொரு மாணவனின் அழகான பை காணாமல் போய் விட்டது.*
*♻️உடனே அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் புகார் கொடுத்தான்.*
*♻️"உனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கானு" அந்த மேலதிகாரி கேட்டார். அதற்கு அந்த மாணவன் நெப்போலியன் மீது தான் சந்தேகம் என்று கூறினான்.*
*♻️உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்.*
*♻️நெப்போலியன் வந்தவுடன் அந்த அதிகாரி எதையும் விசாரிக்காமல் இனி திருடுவியா? என்று நெப்போலியனை அடிக்க ஆரம்பித்தார்.*
*♻️நெப்போலியன் எதுவும் பேசாமல் அடியை வாங்கிக் கொண்டார்.,*
*சிறிது நாட்கள் கழித்து அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம்,*
*♻️அன்று தன் பையைத் திருடியது நெப்போலியன் இல்லை, வேறொரு மாணவன்" என்று கூறி மன்னிப்பு கேட்டான்.*
*♻️மேலதிகாரி தவறு செய்யாத நெப்போலியனை அடித்து விட்டோமே என்று வருத்தப்பட்டு , நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்*
*♻️நெப்போலியன் அறைக்கு வந்தவுடன் " செய்யாத தவறுக்கு அன்று ஏன் அடி வாங்கினாய் ? அன்றே திருடவில்லை என்று கூறி இருக்கலாமே ?" என்று மேலதிகாரி கேட்டார்.*
*♻️அதற்கு நெப்போலியன் " நீங்கள் அடிக்கும் முன்பே கேட்டு இருந்தால் நான் கூறி இருப்பேன், ஆனால் நீங்கள் எதையும் கேட்காமல் அடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.*
*♻️அப்பொழுது நான் திருடவில்லை என்று கூறி இருந்தால் அடிக்கு பயந்து கூறியதாக நினைத்து இருப்பீர்கள்.*
*♻️நான் பயந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது என்பற்க்காகத் தான் அப்பொழுது எதுவும் கூறவில்லை" என்று நெப்போலியன் கூறினார்.*
*♻️நெப்போலியனை மாவீரன் என்று அழைப்பதற்குக் காரணம் அவரின் வெற்றிகளால் அல்ல, அவரின் உறுதியான மனோதிடத்தால் தான்.*
*🏵️தனி சுதந்திரமான சிந்தனை கொண்ட மனிதனின் மனோதிடம் தான் எதையும் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெற்றது...
Comments
Post a Comment