பேட்டி
வேலூர் 25-3-23
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் கருத முடியாது இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல மெஜாரிட்டியுடன் பெரிய நாட்டை ஆளும் கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறது - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் அதனை பெட்டிற்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
__________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார் இந்த கூட்டத்தில் ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா துவங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வாரியாக உறுப்பினர்களையும் பொறுப்பாளர்களையும் அமைப்பது மாநகரம் ஒன்றிய பகுதிகளில் திமுக உறுப்பினர்களை சேர்ப்பது ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்காக பாடுபட்ட வேலூர் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பது மகளிருக்கு மாதம் ரூ.1000 அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை நடந்ததாக யாரும் கருதவில்லை நீண்ட நாள் வழக்கு நடந்து அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்தது நீதிமன்றம் கதவை திறந்தது ஆனால் ராகுல் அதனை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக இப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த முறையல்ல மாபெரும் நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது எல்லா தலைவர்களும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர் சி.பி.ஐ தவறாக மத்திய அரசு பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அதுபற்றி கருத்து கூற முடியாது ஆன் லைன் சூதாட்டிற்கு ஆளுநர் தடை விதித்து அனுமதி தந்தே ஆகவே வேண்டும் அதனை பெட்டிற்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது என கூறினார்
Comments
Post a Comment