பேட்டி

ராகுல்  காந்தி பதவி
நீக்கம்  செய்யப்பட்டது
ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல
அமைச்சர் துரைமுருகன்




வேலுார், மார்ச் 
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல  என வேலுாரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வேலுாரில் இன்று மாலை நடந்தது. மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ., வுமான நந்தகுமார் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வரும் எம்.பி., தேர்தலை எதிர்கொள்ள வேலுார் தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்த வேண்டும், வரும் ஜூன் மாதம் கலைஞர் நுாற்றாண்டு விழா தொடங்குவதால் அதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
பின்னர்  அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது, குற்றத்தின் அடிப்படையில் இது நடந்ததாக யாரும்  கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்தது. அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்தது. நீதிமன்றம் கதவை திறந்தது.
ஆனால் ராகுல் காந்தி அதனை பயன்படுத்தும் முன்பே அவசர, அவசரமாக இப்படிப்பட்ட  தண்டனை வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஒரு மெபெரும் நாட்டை ஆளும் மாபெரும் தனி மெஜாரிட்டியுடன் உள்ள கட்சி, தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களும் இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.
எதிர்  கட்சிகள் மீது பழி வாங்கும் நிலை நடக்கிறது.
சி.பி.ஐ.,யை தவறாக மத்திய அரசு பயன்படுத்துவது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி கருத்து கூற முடியாது.  ஆன் லைன் சூதாட்டத்திற்கு கவர்னர் விதித்த  தடைக்கு இந்த முறை கண்டிப்பாக ஒபபுதல் அளித்து ஆக வேண்டும். இந்த முறை பெட்டுக்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,  க்கள் வேலுார் கார்த்திகேயன், குடியாத்தம் அமலு, வேலுார் எம்.பி., கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்