நேரம்

🚩
*காலை தரிசனம் ---!*
*சோம வார ஷஷ்டி தரிசனம்---------- !!*

*அருள்மிகு திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்....!*

சுப கிருது வருடம் : 
பங்குனி மாதம் 13 ஆம் நாள் !

மார்ச் மாதம் : 27 ஆம் தேதி !
(27-03-2023) 

 திங்கட்கிழமை !!

சூரிய உதயம் : 
காலை : 06-27 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-28 மணி அளவில்

இன்றைய திதி : வளர்பிறை :
ஷஷ்டி !

ஷஷ்டி..
இரவு 08-45 மணி வரை ! அதன் பிறகு    ஸப்தமி !!

இன்றைய நட்சத்திரம் : 

ரோகிணி..
மாலை 06-30 மணி வரை ! அதன் பிறகு மிருகசீருஷம் !!

யோகம் : 
அமிர்தயோகம் ! 

இன்று
மேல் நோக்கு நாள் !

சந்திராஷ்டமம் :

இன்றும்
துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் : 
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

எமகண்டம் : 
காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

குளிகை :  
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!

கரணம் : 
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !

நல்ல நேரம் : 

மதியம் : 
12-00 மணி முதல் 02-00 மணி வரை !
03-00 மணி முதல் 04-00 மணி வரை !

மாலை : 
06-00 மணி முதல் 09-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

புதன் ஓரை : 
காலை : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
ஷஷ்டியுடன் கூடிய சோம வாரம் !

ஷஷ்டி விரதத்துடன், சிவபெருமானையும் சேர்த்து வழிபட வேண்டிய நாள் !!

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம் திருவிடைக்கழி ஆகும்...!

சிதம்பரத்தில் இருந்து..
நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவிடைக்கழி அமைந்துள்ளது...!

இறைவன் திருப்பெயர் ஸ்ரீ காமேஸ்வரர்....!

இறைவியார் திருப்பெயர் ஸ்ரீ காமேஸ்வரி....!

முருகனின் திருப்பெயர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி....!

இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தல மரங்கள் உள்ளன..!

இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், 

மகிழ மரம் ஈசனுக்கும் தல மரங்களாம்....!

இத்தலத்தில்...
முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்...!!

சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இராண்யாசுரன் முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான்...!

சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார்...!

அசுரனாக இருந்தாலும், சிவபக்தனை கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது...!

இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். . .!

சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடது கை தொடையில் வைத்தபடியும் உள்ளது..!

கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம் முருகனின் முன்புறமும் உள்ளன...!

 தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். . . !

குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்...!

முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ..!

தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது.

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், 

முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் *"விடைக்கழி"* எனப்படுகிறது.......!!

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்...!

இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் சிறப்பு...!

மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர்...!!

*திருவிடைக்கழி முருகப் பெருமான் அருளாளே .....இன்றைய நாளும் திரு நாளாகட்டும் .............!!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்