விழா
வேலூர் 25-3-23
அரியூரில் விளையாட்டு கலையோகாவில் சாதனை புரிந்த மாணவ,மாணவிகளின் அன்னையர்களுக்கு கிரீதா பாரதி ஜீஜாமாதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது - மாணவர்களுக்கு செல்போனால் உடல் நலன் பாதிப்பு மன அழுத்தம் ஏற்படுவதால் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்த அனுமதிக்க கூடாது - நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி விருதுகளை வழங்கி பேச்சு
_______________________________________________________________
வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி மண்டபத்தில் தங்ககோவில் மற்றும் கிரீதா பாரதி அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாராயணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான பாலாஜி தலைமையில் கிரீதா பாரதி ஜீஜாமாதா விருதுகள் வழங்கும் விழாவானது நடந்தது இந்த விழாவில் ,ஒருங்கிணைப்பாளர் அசோக்,திருநாவுக்கரசு ,தியாகசந்தன் உள்ளிட்ட பலரும் திரளான மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் பங்கேற்றனர் மாணவியின் பரத நாட்டியம் மற்றும் உடலை வில் போல் வளைத்த யோகாசனம் ஆகியவைகளும் செய்து காண்பிக்கப்பட்டது இவ்விழாவில் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற கார்ணாம்பட்டு அரசு பள்ளி மாணவிகளின் தாயார்களை அழைத்து அவர்களுக்கு கிரீதா பாரதி ஜீஜாமாதா விருதுகளும் இது போன்று பல மாணவ,மாணவிகளின் தாயார்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது மேலும் கிரீதா பாரதி அமைப்பின் தலைவராகவும் நாராயணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பாலாஜி பதவியை ஏற்றுகொண்டார்
பின்னர் விழாவில் நாராயணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பாலாஜி பேசுகையில் மாணவ,மாணவிகளின் தாய்களை கௌரவிக்கப்பட்டது விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் அப்போதுதான் மன நலனும் உடல் நலனும் நன்றாக இருக்கும் ஆகவே குழந்தைகளுக்கு செல்போனை விளையாட கொடுக்காதீர்கள் இதனால் உடல் நலனும் மன நலமும் பாதிக்கும் என்று பேசினார் இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர்
Comments
Post a Comment