ரகளை

வேலூர்      25-3-23

 
 வேலூர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட இளம் சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடல் பகலில் ஒரு நபர் மட்டும் சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார் உழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி உயிருக்கு பாதுகாப்பில்லை என அச்சம் 
________________________________________
     வேலூர்மாவட்டம்,காகிதப்பட்டறையில் ஆட்சியர் அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் சார்பில் நடத்தபடும் சிறுவர்கள் இளம் சிறார்கள் (குற்றம் செய்தவர்கள் ) பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது இதில் 42 இளம்  குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு குற்றவாளி மாலை தன்னை வேறு இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி சுவற்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இரும்பு ராடு செங்கற்களை கொண்டு அங்கு வந்தவர்களையும் தாக்கினார் பின்னர்  4 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மேலே இருந்து உள்ளே சென்ற அந்த இளம் குற்றவாளி மேலும் 10 பேருடன் இணைந்துகொண்டு அங்கிருந்த பாதுகாவலர்களை அடித்து உதைத்து வெளியே துரத்திவிட்டு அங்கிருந்த மேஜைகள் நாற்காலிகள் பேஞ் டியூப் லைட்டு டிவி உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடித்து சூறையாடினார்கள் இல்லம் சூறையாடப்பட்டதால் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கேட்டிற்கு வெளியில் காத்துகிடக்கின்றனர் காவல்துறையும் செய்வதரியாது நிற்கிறது இந்த இளம் குற்றவாளிகள் தொடர்ந்து ரகளையில் ஈடுபடுவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது இரவு அவர்கள் அனைத்தையும் உடைத்துவிட்டு தப்பி செல்லும் வாய்ப்பும் உள்ளது 


Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்