முற்றுகை
வேலூர் 25-3-23
பேரணாம்பட்டு கிராம சாவடி முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம். நடத்தினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கிராம சாவடி முன்பு ஒண்ணாவது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தனியாரிடமிருந்து அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் அமைத்துதரக்கோரி பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கிராமச் சாவடி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு தரக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது இவர் தரக்காடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார் .2006ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தரக்காடு பகுதியில் 49 பேருக்கு வருவாய்துறை மூலம் பட்டா வழங்கியுள்ளனர். ஒரு நபருக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை இதனால் ரியாஸ் அஹமத் தனக்கும் பட்டா வேண்டும் எனமுயற்சி செய்து வந்தார். ரியாஸ் அஹமத் என்பவர் கட்டியுள்ள வீடு சாலை புறம்போக்கு எனக்கூறி ஒன்னாவது வார்டு கவுன்சிலர் அதிகூர் ரஹ்மான் தலைமையில் அப்பகுதி மக்கள் கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகூர் ரஹ்மான் உட்பட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து ஒண்ணாவது வார்டு பொதுமக்கள் கூறுகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தரக்காடு பகுதியில் நான்கு வயது பள்ளி குழந்தை சாலையை நடக்கும்போது விபத்தில் சிக்கி குழந்தை இறந்து விட்டது. அதேபோல் 2018 ல் அரசு தரப்பில் பள்ளிகூடம் அமைக்க ஆணை வழங்கப்பட்டது. ஆனால் மேற்படி இடத்தில் எந்த ஒரு பள்ளியும் அமைக்கவில்லை.அதேபோல் தரக்காடு பகுதியில் பள்ளி இல்லாததால் பெரும்பாலான குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக மாறி உள்ளனர். எனவே மேற்படி தனியார் நபரிடம் உள்ள இடத்தை மீட்டு பள்ளி அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர். மேற்படி ரியாஸ் அகமது என்பவரிம் இடம் குறித்து குடியாத்தம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது .இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment