சண்டை
வேலூர் 25-3-23
முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும்- அவதூறாக பேசும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம மக்கள் சாலை மறியல்- அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் உள்ள கல்லூர்,குறிஞ்சி நகர், பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதுஇங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி என்பவரிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டால் அவர் அவதூறாக பேசுவதாகவும் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் பலமனேரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம்- பலமனேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் குடியாத்தம் வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்பொழுது முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்த அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் குடியாத்தம் பலமனேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment