தம்பதி கைது

ரூ 500 செலுத்தினால்
ரூ 5 ஆயிரம் மளிகை பொருட்கள்
தருவதாக ரூ 20 லட்சம் மோசடி செய்த
தம்பதி கைது


ராணிப்பேட்டை, மார்ச் 
ராணிப்பேட்டை அருகே, 500 ரூபாய் செலுத்தினால் 5 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது  செய்தனர்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் இன்று (27) கூறியதாவது: ராணிப்பேட்டை சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் மீரா, அவரது கணவர் தயாளன். இவர்கள் இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளம் என்ற அமைப்பின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளாக உள்ளதாக கூறிக்கொண்டு, கட்டட தொழிலாளர்கள், ஏழைகளிடம் 500 ரூபாய் செலுத்தினால் ஆறு மாதம் கழித்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்படும் என                 அறிவித்தனர்.
இதை நம்பி ஏராளமானோர்  பணத்தை செலுத்தினர். நேற்று முன்தினம் (26) ராணிப்பேட்டை அருகே அம்மூரில் உள்ள திருமண மண்டபத்தில் மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்தனர்.  பணம் கட்டியவர்கள் அங்கு சென்ற போது ஒரு சிலருக்கு மட்டும் 300 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொடுத்து விட்டு மற்றவர்களை விரட்டிவிட்டனர்.
பணம் கட்டியவர்கள் ராணிப்பேட்டை போலீசில் புகார்  செய்தனர். விசாரணையில், மீராவும், தயாளனும் 20 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு  செய்து மீரா, 43, தயாளன் 48, ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை