ஆர்பாட்டம்
லஞ்சம் வாங்கும்
கல்வி அலுவலர்கள் மீது
நடவடிக்கை எடுக்க தனியார்
பள்ளிகள் ஆர்பாட்டம்
லஞ்சம் வாங்கும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலுாரில் ஆர்பாட்டம் நடந்தது.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நரசரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ். இ பள்ளிகள் சங்கத்தின் மநில பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
தனியார் பள்ளிகளால் அரசுக்கு எந்தவித நிதிச்சுமை ஏற்படவில்லை. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கி, பல கோடி ரூபாய்கள் அரசுக்கு வரியாக செலுத்தி, தரமான கல்வியை தந்து தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறோம்.
தனியார் பள்ளிகள் வேலுார் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் புதுப்பிக்க, பள்ளிகளை பார்வையிட்டு இயக்குனருக்கு அறிக்கை அனுப்புவதற்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி, நர்சரி பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு 1. 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் தொடர் அங்கீகாரம் புதுப்பித்து தருகின்றனர்.
லஞ்சம் தரவில்லையென்றால் பள்ளிகளை மூடிவிடுங்கள் என மிரட்டுகின்றனர். பள்ளிகளை ஆய்வு செய்வதாக கூறி ஏ.சி., காரில் வருவதற்கு5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பள்ளி நிர்வாகிகளிடம் வாங்குகின்றனர். இது தவிர அலுவலக செலவு, டிரைவருக்குடிரைவருக்கு பணம் என தனித்தனியாக வாங்குகின்றனர்.
சீனியாரடிபடி வந்த அங்கீகாரம் புதுப்பித்தல் பைல்களுக்கு முன்னுரிமை தராமல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் 3 மாதங்களில் புதுப்பித்து தந்து விடுகின்றனர். பிராட்டிக்கல் மையம், தேர்வு மையம் அமைப்பதற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகின்றனர்.
அடிக்கடி கூட்டம் போட்டு கேட்ட ஆவணங்களை திரும்ப திரும்ப கேட்பது, அங்கீகாரம் இல்லா பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவேன், கல்வி கட்டணம் கிடைக்க விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். சில பள்ளி நிர்வாகிகளை புரோக்கர்களாக வைத்துக்கொண்டு தனித்தனியாக பேசி வசூல் வேட்டை நடத்துகிறார்கள். இதனால் பள்ளி நிர்வாகிகள் பள்ளியை நடத்த முடியாமல் அழுது புலம்புகிறார்கள்.
வேலுார், சேலம் தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர்கள் மீது தமிழக முதல்வருக்கு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால் இந்த ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, துணை தலைவர் இன்பராஜ், மாநில பொதுச் செயலாளர் சதீஸ், துணை பொதுச் செயலாளர் விஜயகுமார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment