கைது
தோல் தொழிற்சாலைகளில்
திருடிய 3 பேர் கைது
ஆம்பூர், மார்ச்
ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், உம்மராபாத் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ஆட்டுத்தோல் இருந்தது. காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கீழ்கன்றம்பல்லியை சேர்ந்த பிரதீப், 25, முருகன், 41, மேல்விஷாரம் அஜூபாஷா, 47, என்பதும், ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஆட்டுத்தோல்களை திருடியதும், கடந்த ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தோல்களை திருடியதும் தெரியவந்தது.
உம்மராபாத் போலீசார் அவர்களை கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆட்டுத்தோலை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment