நாசம்

அரசு கூர்நோக்கு
இல்லத்தில் ரூ 8 லட்சம்
மதிப்புள்ள பொருட்கள்
உடைத்து சிறுவர்கள் நாசம்



வேலுார், மார்ச் 
வேலுாரில் உள்ள அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை  உடைத்து சிறுவர்கள் நாசம் செய்து தப்பிக்க திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டரை பகுதியில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த இளம் வயதுள்ள  42 சிறுவர்கள்   அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் ஒரு சிறுவன் தன்னை வேறு ஊரில் உள்ள இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி இன்று மாலை 4:00 மணிக்கு பள்ளி சுவற்றின் மீது ஏறி தர்ணா போராட்டம் நடத்தினார்.
பேச்சு வார்த்தைக்கு சென்ற அதிகாரிகளை செங்கற்கள், இரும்பு ராடு ஆகியவற்றால் தாக்கினார். நான்கு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரவு 8:00 மணிக்கு அந்த சிறுவன் கீழே இறங்கினார்.
இல்லத்தின் உள்ளே சென்ற அந்த சிறுவன் இரவு 8:30 மணிக்கு மேலும் 10 சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு இல்லத்திலிருந்த பாதுகாவலர்களை தாக்கி வெளியே துறத்தி விட்டு, இல்லத்தை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெஞ்சு, நாற்காலி, டி.வி.,, டியூப் லைட், சமையல் பொருட்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த  சத்துவாச்சாரி, வேலுார் போலீசார் இல்லத்திற்கு முன்புறம் வந்து செய்வதறியாமல் திணறுகின்றனர். இல்லத்தில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதையில் அனைத்து பொருட்களையும் உடைத்து விட்டு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதால் அப்பகுதியில்  பதட்டம் நிலவுகிறது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்