ஆர்பாட்டம்
வேலூர்,மார்ச்.25-
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்காமல் அலைக்கழிக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4.50 லட்சம் மாணவர்கள் படிப்பதற்காக ஆர்.டி .இ 2 ஆண்டு கல்வி கட்டண பாக்கியம் உடனே வழங்க வேண்டும்.பள்ளி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜா மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார் மாநில துணைத்தலைவர் இன்பராஜ், சட்ட ஆலோசகர் ஜெயவேலு உள்பட தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியை,ஆசிரியர்கள் திரளான கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment