பலி
கிணற்றில் விழுந்து
2 மான்கள் பலி
வேலுார், ஏப். 13–
ஒடுக்கத்துார் அருகே, கிணற்றில் விழுந்து இரண்டு மான்கள் இறந்தன.
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே உள்ள சேர்ப்பாடி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து இறந்து கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் இன்று காலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஒடுக்கத்துார் வனத்துறையினர் இரண்டு மான்கள் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஒடுக்கத்துார் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த மான்கள் இரண்டும் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது.
Comments
Post a Comment