கைது
அனுமதியின்றி மறைத்து வைத்திருந்த
நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு
பறிமுதல்
தொழிலாளி கைது
திருப்பத்துார், ஏப்.
ஆண்டியப்பனுார் மலையில், அனுமதியின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, மான் கொம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனுார் மலையில், திருப்பத்துார் வனத்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில் இருளப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32, என்ற மரம் வெட்டும் தொழிலாளி வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இருண்டு புள்ளி மான் கொம்புகள், பறவைகளை பிடிக்கும் கம்பி வலைகள், கத்தி, துப்பாக்கிக்கு பன்படுத்தும் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும், வன விலங்குகளை வேட்டைடுபவர்களுக்கு அந்த பொருட்களை வாடகைக்கு விட்டு வருவது தெரியவந்தது.
வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து, நாட்டு துப்பாக்கி போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment