குற்றச்சாட்டு

வேலூர்     

சத்துவாச்சாரியில் சங்கிலி தொடர் வணிகத்தில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தில் பொதுமக்கள் பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டுமென கேட்டதால் பொதுமக்கள் மீது தாக்குதல் இருவர் மருத்துவமனையில் அனுமதி காவல்துறை மோசடி நிறுவனத்திற்கு சாதமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு 
________________________________________________________
         வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் டிரான்ஸ் இந்தியா கார்பரேஷன் நெட் ஒர்க் லிமிடெட் ( சங்கிலி தொடர் வணிகம்) செயின் லிங்க் நடைபெற்று வருகிறது இதில் நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அலுமேலுரங்காபுரத்தை சேர்ந்த வித்யா என்பவரும் ஒடுக்கத்தூரை சேர்ந்த சோனா என்பவரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் இதில் ஹெல்த் கேர் பியூட்டி கேர் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.9300 வசூல் செய்து அவர்கள் மூல்ம் ஒவ்வொரு நபரும் 10 முதல் 20 பேர் வரையில் சேர்த்து ஆயிரக்கணக்கான நபர்களிடம் செயின் லிங்க் மூலம் பணம் வ்சூல் செய்துள்ளனர் ஆனால் இவர்கள் கட்டிய பணத்திற்கு பொருளை தரவில்லை பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர் இதுகுறித்து பொது மக்கள் இரண்டு முறை சத்துவாச்சாரி காவல்நிலைத்தில் புகார் அளித்தும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தகராறு செய்த ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்து ஏமாற்றி  அனுப்பி விடுகின்றனர் இந்த நிலையில் அனைக்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் இன்று பணம் கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆனால் பணத்தை தராமல் பொதுமக்களின் மீது தாக்குதலை நடத்தி மிரட்டி கீழை தள்ளினார்கள் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களை காவல்துறையினர் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் சத்துவசாரி காவல்துறையினர் நிறுவனத்திற்கு எதிராக வழங்குபதிவு செய்ய வில்லை அசம்பாவிதமில்லை தப்பி ஓடிய நிறுவனம் மீது வழக்குபதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்