காயம்
யானை தாக்கி
பெண் படுகாயம்
பேர்ணாம்பட்டு, ஏப். 13–
பேர்ணாம்பட்டு அருகே, யானை தாக்கி படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா, 51. இவருக்கு சொந்தமான நிலம் எருக்கம்பட்டு வனப்பகுதியையொட்டி உள்ளது. இன்று காலை தண்ணீர் பாய்ச்ச கோகிலா நிலத்திற்கு சென்ற போது அங்கிருந்த யானை ஒன்று விரட்டிச் சென்று மிதித்து தாக்கியது. இதில் அவரது அனைத்து எலும்புகளும் உடைத்து துாளானது.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment