கைது
குழந்தைக்கு விஷம் கொடுத்து
கொலை செய்த தந்தை கைது
திருப்பத்துார், ஏப்.
கந்திலி அருகே, குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கிழக்கு பதனவாடி கிராமத்தை சேர்ந்தவர், சிவக்குமார், 30. விவசாயி. இவர் மனைவி, சத்யா, 27. இவர்களுக்கு அக்ஷா, 5, இலக்கியா, 3, மித்ரா, 1 என மூன்று மகள்கள் உள்ளனர். சிவக்குமார் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்து விட்டு வந்ததால், அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் மூத்த மகள் அக்ஷாவை அழைத்துக்கொண்டு ஜல்லியூரில் உள்ள தாய் வீட்டிற்கு சத்யா சென்று விட்டார்.
விரக்தியடைந்த சிவக்குமார் கடந்த 8 ம் தேதி பாலில் விஷம் கலந்து கொடுத்து மித்ராவை கொலை செய்தார். இரண்டாவது குழந்தை இலக்கியாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, அவரும் விஷம் குடித்தார். உறவினர்கள் அவர்களை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர். கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.
Comments
Post a Comment