சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

வேலுார்:
வேலுார் காகிதப்பட்டறையில் அரசு சிறுவர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இந்த மாதம் 27 வரை ம் தேதி வரை 18 சிறுவர்கள் தப்பிச்சென்றனர். இதில் 11 பேர் பிடிபட்டனர். ஒருவர் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். மீதமுள்ள 6 பேரை தனிப்படையினர் தேடி  வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜய்குமார் கடலுார் பாதுகாப்பு இல்லத்திற்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த கணபதி வேலுார் பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.
வேலுார் பாதுகாப்பு இல்ல பாதுகாவலர் துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்தார்.

கள் விற்பனை அமோகம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஆற்காடு, கலவை,  திமிரி,  தாமரைப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெய்யிலின்  தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து  கடத்திவரப்பட்டும் கள் இப்பகுதியில் அமோகமாக  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சொம்பு  கள் 50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. 

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை