கைது

ஆந்திரா மாநிலத்திற்கு காரில்
கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன்
அரிசி பறிமுதல்
2 பேர் கைது


திருப்பத்துார், ஏப். 13–
திருப்பத்துார் அருகே, ஆந்திரா மாநிலத்திற்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்..
ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று, திருப்பத்துார் அருகே, கொத்துார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை சோதனை  செய்ததில், ஒரு டன் ரேஷன் அரிசி  இருந்தது. விசாரணையில், நாட்றம்பள்ளியை சேர்ந்த டிரைவர்கள் ஏழுமலை, 36, சந்தோஷ், 33, ஆகியோர் ஆந்திரா மாநிலம், குப்பத்திற்கு ரேஷன் அரிசியை  கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார்  அவர்களை  கைது செய்து, காருடன் சேர்த்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை