கோரிக்கை
குடியாத்தம் அருகே மலைபோல உயரமான வேகத்தடையை அகற்றி சாதாரண சாலையாக மாற்றித் தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கூடநகரம் கிராமத்திலுள்ள மாங்கனி நகர் பகுதியிலுள்ள சாலைகளில் மலைபோல் மிக ஆபத்தாக உள்ள வேகத்தடைகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண சாலையாக உடனடியாக மாற்றி தரவேண்டி கோரிக்கை... அவசரத்திற்கு ஆட்டோ வரமுடியவில்லை, மருத்துவத்திற்கு ஆம்புலன்ஸ் வரமுடியவில்லை மற்றும் திருவிழா காலங்களில் சுவாமி தேர் இழுத்து வர முடியவில்லை, சிறிய சைக்கிள் ஓட்டும் குழந்தைகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்கள் ஊரிலுள்ள விசித்திரமான இந்த ஏழு மலைப்போல் உயரமாகவம் ஆபத்தாகவும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்றிசாதாரண சாலையாக மாற்றித் தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
Comments
Post a Comment