தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த ரகு மகள் அனுப்பிரியா வயது (26) சென்னையில் ஓரு ஐடி கம்பெனியில் பணி புரிந்து கொண்டு வங்கி தேர்வு எழுதி உள்ளார் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி ராமர் கோவில் தெருவை சேர்ந்த சிவமூர்த்தி மகன் திருமுருகன் வயது (26) இருவரும் வங்கி தேர்வு எழுதும் போது பழக்கம் ஏற்பட்ட இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு இருவரும் ஓரு கோவில் ரகசிய திருமணம் செய்து கணவன் மனைவி இருவரும் மின்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர் நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த அனுபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் திருமணம் ஆகி 21 ஆனதால் வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை நடத்த உள்ளார்.
Comments
Post a Comment