ஆய்வு

♻️இன்று 11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  வேலூர் சரக  காவல்துறை துணைத் தலைவர்  முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன்., இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து Beat Patrol Vehicle, Women Helpdesk Vehicle , Traffic Marshal Vehicle இருசக்கர வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இவ் வாகனங்களில்  பழுதுகள் நீக்கப்படும் புதிதாக ஒலிபெருக்கி (PA System), மின்மினு விளக்குகள் (Blinkering light), எச்சரிக்கை ஒலிப்பான் (siren) பொருத்தப்படும். ரோந்து செல்லும் காவலர்கள் கூட்ட நெரிசலை சீர் செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் போக்குவரத்து சீர் செய்யவும் சம்பந்தப்பட்ட காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

 ♻️ இதனைத் தொடர்ந்து புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள 485 தடுப்பான்கள் (Barricades) முதல் கட்டமாக, 80  தடுப்பான்கள் (Barricades) மற்றும் 300 கூம்புகள் (Traffic cones) காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P. பழனி, அவர்களிடம் காட்பாடி உட்கோட்டத்திற்காக வழங்கப்பட்டது. உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்
Dr.பிரசன்ன குமார், இ.கா.ப., அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. K. மனோகரன், அவர்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. N. C. சாரதி, அவர்கள் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்