பலி
பைக்குகள் மோதல்
2 பேர் பலி
வாணியம்பாடி, ஏப். 13–
வாணியம்பாடி அருகே, பைக்குகள் மோதி இரண்டு பேர் பலியாகினர்.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் முகமது அர்ஷத், 30. இவர் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஆரிப் அகமத், 29, என்பவருடன் நேற்று (11 ) இரவு 12:00 மணிக்கு வாணியம்பாடி அருகே நெக்குந்திக்கு பல்சர் பைக்கில் சென்று டீ குடித்து விட்டு வாணியம்பாடிக்கு வந்து கொண்டிருந்தார்.
செட்டியப்பனுார் கூட்டுசாலைக்கு வந்த போது எதிரே யமாகா பைக்கில் வந்த 35 வயதுள்ள நபர் ஓட்டி வந்த பைக் பல்சர் பைக் மீது மோதியது. இதில்
சம்பவம் நடந்த இடத்தில் முகமது அர்ஷப் இறந்தார். படுகாயமடைந்த இருவரை போலீசார் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 35 வயதுள்ள வாலிபர் இன்று மதியம் 1:00 மணிக்கு இறந்தார். ஆரிப் அகமதுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த 35 வயதுள்ளவர் குறித்து விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment