தற்கொலை
காட்பாடியில்
பெற்றோருடன் தகராறில்
வாலிபர் தீக்குளித்து சாவு
காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
அபாய சங்கிலியை இழுத்ததால்
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தம்
சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 7.45 மணிக்கு காட்பாடி அருகே உள்ள முகுந்தராயபுரம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9 முன்பதிவு பெட்டியில் அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர்.இதனால் ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் அந்தப் பெட்டியில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்து பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்தது யார் என்பது தெரியவில்லை என தெரிவித்தனர். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment