மெமோ
திருப்பத்துார் அருகே
2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தலைமை ஆசிரியருக்கு மெமொ
திருப்பத்துார், ஏப்.
கந்திலி அருகே சண்டையிட்டுக்கொண்ட இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் 29 ல் பள்ளி கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார்.
அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43, ஆகியோருக்கிடையே கால அட்டவணை தயாரிப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டு, ஆபாசமாக திட்டிக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்து கடந்த வாரம் சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது.
மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment