உத்தரவு

 போலீஸ் ஸ்டேஷன்களில்
பஞ்சாயத்து  செய்யக்கூடாது
டி.ஐ.ஜி., உத்தரவு


வேலுார், ஏப். 13–
போலீஸ் ஸ்டேஷன்களில் விபத்து குறித்து வழக்கு பதிவு  செய்யாமல், பேரம் பேசி பஞ்சாயத்து  செய்யக்கூடாது என வேலுார் டி.ஐ.ஜி.,  முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை  தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. வேலுார் மாவட்ட எஸ்.பி.,  ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களின் மீது வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி  விசாரணை நடத்தினார். அப்போது, பொன்னை  கீரச்சாத்து பகுதியை சேர்ந்த ஒருவர் நிலப்பிரச்சனை குறித்து 100 முறை பொன்னை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி., முத்துசாமி உத்தரவிட்டார்.
வேலுாரை சேர்ந்த அசேன் என்பவர் கொடுத்த மனுவில் முன்பு நான் கஞ்சா வியாபாரி, இப்போது மனம் திருந்தி வாழ்கிறேன். போலீசார் என் மீது கஞ்சா வழக்கு போட திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இவர் மீது எந்த வழக்கும் போடக்கூடாது, ஆனால்  கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய டி.ஐ.ஜி., முத்துசாமி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மனு கொடுத்த பலர், வாகன விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும், புகார் கொடுக்க சென்றால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல்,  பேரம் பேசி  பஞ்சாயத்து செய்வதாகவும், இதில் குறைந்தளவு பணத்தை பெற்றுத்தருவதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு  செய்ய வேண்டும், பஞ்சாயத்து  செய்து பேரம் பேசி பணம் வாங்கிக்கொடுக்கக்கூடாது, விபத்து ஏற்படுத்தினால் வழக்கு பதிவு  செய்யாமல் பஞ்சாயத்து செய்வது
ஏன்?
விபத்தில் சிக்கியவர்களுக்கு விபத்து ஏற்படுத்தியவரிடமிருந்து பணம் பெற்றுத்தருவதாக பஞ்சாயத்து  செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம்தான் தீர்வு காண வேண்டும். பஞ்சாயத்து செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  டி.ஐ.ஜி., முத்துசாமி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை வேலுார், ராணிப்பேட்டை,  திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட போலீசாருக்கு சுற்றறிக்கையாக உடனடியாக  அனுப்பவும் உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்