பயிலரங்கம்
Date:22.04.2023
*ஆசிரியர் கூட்டணியின் இயக்கப் பயிலரங்கம்*
&&&&&&&&
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்கப் பொறுப்பாளர்களுக்காக இரண்டு நாள் பயிலரங்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள அரிமா சங்க நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் டேவிட் ராஜன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் நல்.ஞானசேகரன் வரவேற்றுப் பேசினார்.
இப்பயிலரங்கினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்தார்.
மாநிலத் தலைவர் மு.மணிமேகலை பொதுச்செயலாளர் ச.மயில் பொருளாளர் ஜெ.மத்தேயு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாநிலத்துணைத்தலைவர்கள் பெ.அலோசியஸ் துரைராஜ், நா.அமுதவல்லி, மாவட்ட செயலாளர்கள் பி.செ.அமர்நாத்,(இராணிப்பேட்டை) மு.சத்தியநாதன் (சென்னை), எ.அந்தோணிராஜ், வேலூர் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன் ஆகியோர் பல்வேறு அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர்.
முன்னாள் பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன், பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலார் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தென் மண்டல துணைத்தலைவர் முத்துகுமாரசாமி, இயக்கத்தில் பெண்கள் என்ற தலைப்பில் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை முன்னாள் வட்டாரக்கல்வி அலுவலர் ச.மனோகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாநில செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணன், சி.ஜி.பிரசன்னா மாவட்ட செயலாளர்கள் க.கதிரவன், த.முருகன், மு.சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கலைவாணன், அ.ஜோசப்அன்னையா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு மண்டலத்தைச் சார்ந்த வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வட்டார, கல்வி மாவட்ட, மாவட்ட நிர்வாகிகள் 250 பேர் பங்கேற்றனர். பயிலரங்க ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.
முடிவில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வி.சி.பாபு நன்றி கூறினார்.
&&&&&
தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கினை தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தன்ன் துவக்கி வைத்தபோது எடுத்தப்படம் உடன் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, மாநிலப்பொருளாளர் ஜெ.மத்தேயு, மாநில துணைத்தலைவைர்கள் ரஞ்சன் தயாளதாஸ், அலோசியஸ் துரைராஜ், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் நல்.ஞானசேகரன், மாநில செயலாளர்கள் டேவிட்ராஜன், எஸ்.கிருஷ்ணன், சி.ஜி.பிரசன்னா உள்ளிட்டோர்
Comments
Post a Comment