பஸ்
குடியாத்தம்
25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
குடியாத்தம்: மே 13–
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை 15 ம் தேதி நடைபெறுகிறது. இதில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக 15, 16 ம் தேதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், வேலுார் கோட்டம் சார்பில் வேலுார், பேர்ணாம்பட்டு, ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 25 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறையினர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment