கைது

4 ரவுடிகள் குண்டாசில் கைது

வேலுார்: மே 13–
வேலுார் தொரப்பாடியை சேர்ந்தவர் குமார், 30, பெரம்பலுார் செந்தில், 37, சேலம் ஈஸ்வரன், 23,  காளாம்பட்டு கதிரவன், 27. ரவுடிகளான இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில்  ஈடுபட்டதால் வேலுார் மாவட்ட  போலீசார் கடந்த மாதம் அவர்களை கைது செய்து வேலுார் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது தலா 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் இன்று வழங்கினர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்