விழா
ஒருவருக்கொருவர் தகவல்களை
பரிமாறிக் கொள்வதற்கான திறனை
உருவாக்கிக் கொண்டால் உயர்ந்த
நிலைக்கு செல்லாம்
திருவள்ளுவர் பல்கலை
துணை வேந்தர் பேச்சு
வேலுார், ஏப். 28–
ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான திறனை உருவாக்கிக் கொண்டால் உயந்த நிலைக்கு செல்லலாம் என திருவள்ளுவர் பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம் பேசினார்.
வேலுார் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லுாரியில், 51 வது ஆண்டு விழா இன்று நடந்தது. கல்லுாரி செயலாளர் மணிநாதன் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசியதாவது:
மாணவிகள் நல்ல நட்பை தேர்ந்தெடுக்க வேண்டும். வயதில் உயர்ந்தவர்களிடம் நட்பு கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய குறிக்கோள்களையும், உயந்த நிலையையும் அடைவீர்கள். நீங்கள் எவ்வளவு உயர் கல்வியை பெற்றாலும் அதன் மூலம் ஒரு நல்ல வேலை வாய்ப்பு பெற்றாலும், அதை விட முக்கியமானது ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான திறனை உருவாக்கிக் கொண்டால் உயர்ந்த நிலைக்கு செல்லாம்.
ஆசிரியர்கள் கதை சொல்லி பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கல்லுாரித்தலைவர் சிவக்குமார், கல்லுாரி முதல்வர் பானுமதி, கல்லுாரி டிரஸ்ட் உறுப்பினர் பிரசாந்த், விலங்கியல் துறை தலைவர் சசிகலா பங்கேற்றனர்.
Comments
Post a Comment