விழா

வேலூர்  14-5-23

குடியாத்தம் கெங்கை அம்மன்  சிரசு திருவிழாவை முன்னிட்டு இன்று திருதேர் விழா தொடங்கியது தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுஇதனிடையே சிரசு திருவிழாவை முன்னிட்டு இன்று திருத்தேர் திருவிழா தொடங்கியது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உற்சவத்தை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வைத்து  கோபாலபுரம் கோயில் அருகாமையில் இருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்றது வழி நேடுகும் ஆடு கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் 

மேலும் தேரின் மீது உப்பு மற்றும் மிளகு உள்ளிட்டவற்றை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை