கைது
ஆலங்காயம் அருகே
நாட்டு துப்பாக்கி பதுக்கியவர்
கைது
ஆலங்காயம், ஏப். 28–
ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் வனத்துறையினர் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், ஆலங்காயம் அருகே எரிவட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அண்ணாமலை, 54, என்பவர் வீட்டில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது. விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு வாடகைக்கு விட பதுக்கி வைத்தது தெரியவந்தது. வனத்துறையினர் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment