அறிக்கை
வேலூர் மாவட்ட காவல்துறை
செய்தி வெளியீடு
நாள் : 13.05.2023
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன்.. இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் சட்டத்திற்கு விரோதமான மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்மந்தமாக 80 வழக்குகள் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய Lorry-6, JCB- 1, Tractor-14, மாட்டு வண்டி-49 என மொத்தம்-85 வாகனங்கள் மற்றும் 37-யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 13.05.2023-ம் தேதி மேல்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு Tractor மற்றும் விருதம்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்படுகிறது.
Comments
Post a Comment