கூட்டம்

ராணிப்பேட்டைமாவட்டம்   14-5-23

       
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய ஊரக வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் -  கரும்பு டன்னுக்கு ரூ.4000 மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் -ஆற்காட்டில் நடந்த விவசாயிகள் சங்க மாநில செயற்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

    ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில்   தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்  மாநில தலைவர்   வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மாநில துனைத்தலைவர் ஹரிமூர்த்தி  மாநில அமைப்பாளர் இராமதாஸ் மாநில இளைஞரணி தலைவர்  சுபாஷ் மாவட்ட தலைவர்கள் (இராணிப்பேட்டை) மணி (வெங்கடேசன்) வேலூர் (ஆனந்த ரெட்டியார்) திருப்பத்தூர் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  இக்கூட்டத்தில்   தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுக்க வேண்டும்  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500  கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.  4000   வழங்க வேண்டும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் சேதத்தை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முற்றிலும் வேளாண்மை பணிகளுக்கு  பயன்படுத்த வேண்டும் பாலாற்றில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்   இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி உயிர் நீத்த  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 5ல் உழவர் தினபேரணி மற்றும் பொது கூட்டம் இந்த வருடம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்க பட்டது வாலாஜா நகரில் உள்ள விதை சுத்திகரிப்பு மையத்தை சுற்று சுவருடன் கூடிய கிடங்கு அமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை