பாராட்டு
கடந்த 2022 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற 14-வது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியின் போது சிறப்பாக பாதுகாப்பு பணி புரிந்தமைக்காக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர்.C.சைலேந்திரபாபு. இ.கா.ப , அவர்களால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள்-3, உதவி ஆய்வாளர்கள்-5, தலைமை காவலர்கள்-6, முதல் நிலை காவலர்கள்-15, காவலர்கள்- 47, ஆக மொத்தம் 84 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இன்று (12/05/2023) மாலை 05.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப அவர்களால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment