பலி
மின்சாரம் தாக்கி
லைன்மேன் பலி
திருப்பத்துார், ஏப். 29–
திருப்பத்துார் அருகே, மின்சாரம் தாக்கி லைன் மேன் இறந்ததால் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி காலனியை சேர்ந்தவர் தமிழ் ராஜ், 30. மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். நேற்று ( 27) மாலை 5:00 மணிக்கு சோமநாதபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதன் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இன்று காலை 8:00 மணிக்கு அவர் இறந்தார். தமிழ் ராஜ் சாவுக்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு திருப்பத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தமிழ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
Comments
Post a Comment