விழா

பெண்கள் அரசியலுக்கு வந்தால்
நாடு முன்னேற்றமடைந்து அரசியல்
துாய்மையாகும்
கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்

வேலுார், ஏப். 29–
பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேற்றடைந்து அரிசியல் துாய்மையாகும் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.
வேலுார் மாவட்டம்,  குடியாத்தம் தனியார் மகளிர்  கல்லுாரியில்  (அபிராமி கலை மற்றும் அறிவியல்  கல்லுாரி) பட்டமளிப்பு  விழா இன்று நடந்தது.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் 200 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:  பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
பிரதமர் மோடி தொடங்கிய முத்ரா வங்கி கடன்  திட்டத்தின் மூலம் 23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன. அதில் 66 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கு பெற்று வருகின்றனர். ராணுவத்தில்  கமாண்டர் பதிவியில் 133 பெண்கள் உள்ளனர்.
இனி வரும் காலங்களில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேற்றமடைந்து அரசியல் துாய்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
பின் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பெண்களுக்கு ஏற்கனவே 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த திட்டத்தை அறிவித்தார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை.        
பிரதமர் வரும் ஞாயிற்றுக்கிழமை நுாறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச உள்ளார். இது சமூதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  கதர்  ஆடை அணிதல் என பல்வேறு கருத்துக்களை பிரதமர் இதில் தெரிவித்துள்ளார். சாமான்ய மக்களுக்கு மனதின் குரல் விழிப்புணர்வையும், மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும்            ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 கவர்னர்களின் செயல்களை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, அந்தந்த கவனர்கள் எவ்வாறு சட்டத்தை  பயன்படுத்துகிறார்களோ அது அவரவர் விருப்பம். என்னை பொறுத்த வரை கால நிர்ணயத்திற்குள் செய்து முடிப்பதுதான்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு முறைகேடுகள் ஒன்றும் நடக்கவில்லை, சில பரிசோதனைகளுக்கு கட்டணம் அறிவித்துள்ளனர்.  இந்த  கட்டணம் மற்ற இடங்களை விட குறைவாக உள்ளது. இங்கு ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது.
60 சதவீதம் தமிழக மக்கள்  இங்கு மருத்துவம் வசதி பெற்று வருகின்றனர்.  வேண்டும் என்றே இது போன்ற பிரச்சனை கிளப்பி விடப்படுகிறது. குறை சொல்லும் அளவிற்கு அங்கு பிரச்சனை ஒன்றும் நடக்கவில்லை. மத்திய அரசின் நிதிகளை, திட்டங்களுக்காக மாநில அரசுகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.  
மத்திய அரசின் பெயரே இல்லாமல் மாநில அரசின்  திட்டம் போல செயல்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்