விஐடி செய்தி
வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில்
பி.டெக் நுழைவு தேர்வு முடிவு
வெளியீடு
வேலுார், ஏப். 27–
வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் பி.டெக் நுழைவு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இது குறித்து வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தி: வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2023) பி.டெக்., பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு துபாய், குவைத், மஸ்கட் போன்ற வெளிநாட்டிலும், உள்நாட்டிலுமாக 121 மையங்களில் கடந்த 17 ல் முதல் 23ல் வரை கணினி முறையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குஷ்அக்ரா பாஸ்இஷ்த், 2 ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த ப்ரக்சல் ஸ்ரீனிவாஸ் செளத்ரி, 3 ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த மகின் பிரமோத், 4ம் இடத்தை கேரளாவை சேர்ந்த ஆசித் ஸ்டென்னி, 5ம் இடத்தை பீகாரை சேர்ந்த அன்கிட் குமார், 6 ம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நந்யாலா பிரின்ஸ் பிரேன் அம் ரெட்டி, 7 ம் இடத்தை பீகாரை சேர்ந்த உமர் பைசல், 8 ம் இடத்தை மகாராஷ்ட்ராவை சேர்ந்த அன்சுல் சந்தீப் நப் ேஹாட், 9ம் இடத்தை உத்திர பிரதேசத்தை சேர்ந்த தன்மய் பாஹல், 10ம் இடத்தை உத்திர பிரதேசத்தை சேர்ந்த தன்மய் பாஹல் ஆகிய மாணவர்கள் பெற்றனர்.
நுழைவுத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்காக வரும் 26 ல் முதல் ஜூன் 14 ல் வரை கலந்தாய்வு நடைபெறும்.
ரேங்க் 1 முதல் ஒரு லட்சம் வரை ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு வி.ஐ.டி., வேலுார், சென்னை, ஆந்திரா, போபாலில் இடம் கிடைக்கும். ஒரு லட்சத்திற்கு மேலாக ரேங்க் பெற்றவர்களுக்கு ஐந்து கட்ட கவுன்சிலிங் ஜூன் 12ல் முதல் 14 ல் வரை வி.ஐ.டி., ஆந்திரா, போபாலில் மட்டும் தான் இடம் கிடைக்கும்.
முதல் கட்ட கலந்தாய்வு வரும் 26 ல் முதல் 30ல் வரையில் ரேங்க் 1 முதல் 20 ஆயிரம் பெற்றவர்களுக்கும், 2 ம் கட்ட கலந்தாய்வு மே 9ல் முதல் 11 வரை ரேங்க் 20001 முதல் 45 ஆயிரம் வரை, 3 ம் கட்ட கலந்தாய்வு மே 20 ல் முதல் 22 ல் வரையிலும், ரேங்க் 45,001 முதல் 70 ஆயிரம் வரையிலும், 4 ம் கட்ட கலந்தாய்வு மே 31 ல் முதல் ஜூன் 2 ல் வரை ரேங்க் 70,001 முதல் 1 லட்சம் வரையிலும், 5 ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6 ல் முதல் 14 வரை ஒரு லட்சத்திற்கு மேலாக ரேங்க் உள்ளவர்களுக்கு நடைபெறும்.
ஒன்று முதல் 10 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு பி.டெக்., படிப்பில் நான்கு ஆண்டுகளுக்கும் 100 சதவீதம் கல்வி கட்டணம் சலுகையும், 11 முதல் 50 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீதம் கல்வி கட்டண சலுகையும் 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டண சலுகையும், 101 முதல் 500 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment